பிகில், கைதி 24 மணி நேர காட்சி?

பிரபல ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது அதிகாலை காட்சிகள் அதாவது அதிகாலை 3 மணி, 4 மணிக்கு காட்சிகள் திரையிடப்படுவது வழக்கம். அதற்கு நல்ல வரவேற்று இருந்தது. ஆனாலும் அதிகாலை காட்சிகள் திரையிடுவதற்கு சில தரப்பு ஆட்சேபனை தெரிவித்திருந்தது. இம்முறை இன்னமும் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் தீபாவளியையொட்டி 2 நாள் முன்னதாக 25ம் தேதி பிகில், கைதி படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

Advertising
Advertising

இப்படங்களை 24 மணி நேரமும் தியேட்டர்களில் திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அனுமதி கேட்டு தமிழக அரசிடம் முறையிட்டுள்ளது. இதுபற்றி தியேட்டர் அதிபர்கள் தரப்பில் கூறும்போது,’ இருதினங்களுக்கு முன்பாக 24 மணி நேர தொடர் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது. அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம்’ என்றனர்.

Related Stories: