தமிழ் சினிமா வேண்டாம் - ஜான்வி முடிவு

ஸ்ரீதேவி, போனிகபூரின் மகள் ஜான்வி கபூர், இந்தியில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து 3 படங்களில் அவர் நடித்து வருகிறார். அவர் தமிழ் அல்லது தெலுங்கில் நடிப்பார் என பேச்சு எழுந்தது. போனிகபூர் தமிழ், தெலுங்கு படங்களை தயாரிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அஜித் நடிப்பில் வலிமை படத்தை அவர் தயாரிக்கிறார்.

Advertising
Advertising

பிங்க் இந்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கையும் அவர் தயாரிக்க உள்ளார். இந்த இரு படங்களில் ஒன்றில் ஜான்வி நடிப்பார் என பேசப்பட்டது. இது பற்றி போனிகபூர் கூறும்போது, ‘ஜான்வியும் தென்னிந்திய சினிமாவில் நடிப்பார்.

ஆனால் இது பற்றி அவர்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்றார். இதற்கிடையே விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்க ஆசை என ஜான்வி சொல்லியிருந்தார். இதனால் அவர் தெலுங்கில் அறிமுகமாகலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் தமிழ் உள்பட எந்த தென்னிந்திய மொழியிலும் இப்போதைக்கு நடிக்க விரும்பவில்லை என ஜான்வி தெரிவித்துள்ளார்.

Related Stories: