×

24 மணி நேர உண்மை சம்பவம் படமானது

அவசர சிகிச்சை நிபுணர் அலெக்ஸ் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள படம், எதிர்வினையாற்று. கதை, திரைக்கதை, வசனம் எழுதி அலெக்ஸ், இளமைதாஸ் இயக்கியுள்ளனர். சனம் ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன் நடித்துள்ளனர். படம் குறித்து அலெக்ஸ் கூறியதாவது: எந்த வம்புக்கும் செல்லாமல் தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருக்கும் போட்டோகிராபர், ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராவிதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான்.

பிறகு அந்த பெண்ணுடன் சேர்ந்து, அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின்தொடர்கின்றன என்பது கதை. இன்று இரவு  தொடங்கி, நாளை இரவுக்குள் 24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் கதை கொண்ட படம் இது. சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன்  நடந்த உண்மை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபரின் அனுமதியுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளோம்.

Tags : reality event ,
× RELATED காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி...