8 மாதம் தூங்கும் வினோத நோயாளி கேரக்டரில் சேரன்

சேரன், சிருஷ்டி டாங்கே, சரயூ மோகன், நந்தனா வர்மா, இர்பான் நடித்துள்ள படம் ராஜாவுக்கு செக். மழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: இதில் சேரன் சி.பி.சி.ஐ.டி அதிகாரி. அவர் மகளுக்கு ஒரு பிரச்சினை. அந்த பிரச்னையிலிருந்து அவர் மகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை. இதன் இன்னொரு பகுதி அந்த பிரச்னை பற்றி ஒவ்வொரு பெண் குழந்தையை பெற்ற பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டியது.

Advertising
Advertising

ஒரு பெண் குழந்தை பாதுகாப்பில் தகப்பனின் பங்கு என்ன என்பது மற்றொரு பகுதி. இவை தவிர மூன்றாவது பகுதி ஒன்று உள்ளது. அது சேரனின் கேரக்டர். சேரன் ‘க்ளைன் லிவின் சிண்ட்ரோ’ என்ற நோயால் பாதிக்கப்பட்டவர். எந்த நேரத்திலும் அவர் தீடீரென தூங்கி விடுவார்.

இந்த தூக்கம் பல மணி நேரம், பல நாள், பல வாரங்கள் கூட நீடிக்கும். இந்த பிரச்னை உலகில் ஆயிரத்திற்கும் குறைவானவர்களுக்குத்தான் இருக்கிறது. ஒரு பெண் 8 மாதங்கள் தொடர்ந்து தூங்கியது உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குறைபாடுள்ள கேரக்டர் உலகில் எந்த சினிமாவிலும் வந்ததில்லை. முதன் முதலாக தமிழ் படத்தில் கொண்டு வந்திருக்கிறோம்.

Related Stories: