விக்ரம் 58-வது படத்தில் இணைந்த கேஜிஎஃப் ஹீரோயின்

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்து விக்ரம் நடிப்பில் படம் இயக்குகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் முக்கிய வேடம் ஒன்றில் இர்பான் பதான் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

Advertising
Advertising

இந்நிலையில் இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'கே.ஜி.எஃப்' படத்தின் நாயகியான ஸ்ரீநிதிஷெட்டி நடிக்க உள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது.  இப்படத்தின் மூலம் ஸ்ரீ நிதி ஷெட்டி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். மேலும் இப்படம் வரும் ஏப்ரல் 2020' ல் வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: