பாலாஜி சக்திவேல், ராதாமோகன் படங்களில் சாந்தினி

ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சாந்தினி. சித்து பிளஸ் டூ, ராஜா ரங்குஸ்கி உள்பட பல படங்களில் நடித்தவர் சாந்தினி. சாமுராய், காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 படங்களை இயக்கியவர் பாலாஜி சக்திவேல். அடுத்து ரா ரா ராஜசேகர், யார் இவர்கள் படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

Advertising
Advertising

அடுத்ததாக அவர் இயக்கும் படத்தில் நடிக்க சாந்தினியை ஒப்பந்தம் செய்துள்ளார். அதேபோல் ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருக்கிறார். இதில் ஹீரோயினாக நடிக்க சாந்தினி தேர்வாகியுள்ளார். இதில் பிரியா பவானி சங்கர் நடிப்பதாக இருந்தார். கால்ஷீட் பிரச்னையால் அவர் நடிக்கவில்லை என கூறப்படுகிறது.

Related Stories: