என்னை பிடிக்காதவர்கள் என் படத்தை பார்க்காதீர்கள் - வித்யாபாலன்

இந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்த வித்யாபாலன் அஜீத் ஜோடியாக நேர் கொண்ட பார்வை படம் மூலம் தமிழில் என்ட்ரி தந்தார். தொடக்க காலத்தில் இவரது நடிப்பு பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமான தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் படுகவர்ச்சியாக நடித்து திரையுலகினரின் பார்வையை தன்பக்கம் திருப்பினார். ஆனால் தொடர்ந்து கவர்ச்சி வேடங்களில் நடிக்க தயாராக இல்லை.

வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்யத் தொடங்கினார். அதற்கு ஒருபுறம் வரவேற்பும் மற்றொருபுறம் விமர்சனங்களும் வந்தன.
குறிப்பிட்ட ஒரு கூட்டம் எந்நேரமும் வித்யாபாலனை விமர்சிப்பதிலேயே குறியாக இருந்து வருகின்றனர். அவர்களுக்கு தக்க பதிலடி தந்திருக்கிறார் வித்யா பாலன். அவர் கூறும்போது,’என்னை பிடிக்காதவர்கள் என் படத்தை பார்க்காதீர்கள்.

டர்ட்டி பிக்சர் மற்றும் கஹானி படங்களில் நடித்தபிறகு படங்களை எப்படி தேர்வு செய்து நடிப்பது என்பதை நான் கற்றுக்கொண்டேன். எல்லா மொழிகளி லும் எனக்குள்ள துணிச்சலால் நான் நடிக்கிறேன். சிலர் நான் தேர்வு செய்வதை விரும்புவார்கள், சிலர் விரும்பமாட்டார்கள். யாருக்கெல்லாம் விருப்பமில்லையோ அவர்கள் என் படத்தை பார்ப்பதை நிறுத்திவிடுங்கள்’ என்றார் வித்யாபாலன்.

Tags : Vidya Balan ,
× RELATED சகுந்தலா தேவி ஆகிறார் வித்யா பாலன்