×

மீண்டும் காதலிக்க தயாராகிறார் ஸ்ருதிஹாசன்

பிரிட்டீஷ் நடிகர் மைக்கேல் கார்சேல் என்பவரை சில வருடங்களாக காதலித்து வந்த ஸ்ருதிஹாசன், திடீரென்று அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்த காதலனை நிரந்தரமாக பிரிந்துவிட்டதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘நாங்கள் பிரிந்துவிட்டோம். இனி அவரவர் பாதையில் பயணிப்போம். என்றாலும், நல்ல நண்பர்களாக இருப்போம்’ என்று சொன்னார்.

மைக்கேல் கார்சேல் கூட இதுபோன்ற கருத்தையே தெரிவித்து இருந்தார். தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன், இசை நிகழ்ச்சிகள் நடத்துவதிலும்,  பின்னணி பாடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஸ்ருதிஹாசன், தான் மீண்டும் ஒருவரை காதலிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நம் வாழ்க்கையில் இதுதான் நடக்கும், இது மட்டுமே  நடக்கும் என்று எந்த விதியும் இல்லை. எந்த நேரத்திலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம். சில நேரங்களில் நல்லவர்களாக இருப்பவர்கள், சில நேரங்களில்  அதற்கு நேர்மாறாகவும் இருப்பார்கள். காதல் முறிந்துவிட்டது குறித்து நான் வருத்தப்படவில்லை.

ஆனால், என் வாழ்க்கையில் இது ஒரு மறக்க முடியாத அனுபவமாக  இருந்தது. காதல் மற்றும் காதல் முறிவின் மூலம் பல விஷயங்களை  கற்றுக்கொண்டேன். மீண்டும் என் வாழ்க்கையில் காதல் வரலாம். சிறந்ததொரு  காதலுக்காக காத்திருக்கிறேன். அந்த விஷயம் நடந்தால், கண்டிப்பாக என்  ரசிகர்களிடம் வெளிப்படையாக சொல்வேன்.

Tags : Sruthihasan ,
× RELATED மீண்டும் காதலில் விழுவேன்: சொல்கிறார் ஸ்ருதிஹாசன்