4 கதை கொண்ட படத்தில் அமலாபால்

தெலுங்கில் சமந்தா நடிப்பில் ரிலீசான ஓ பேபி படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி, விரைவில் அடுத்த படத்தை இயக்குகிறார். இந்தியில் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகும் இதற்கு லஸ்ட் ஸ்டோரிஸ் என்றே பெயரிடப்பட்டுள்ளது.

4 கதைகள் இடம்பெறுவதால், வெவ்வேறு இயக்குனர்கள் இயக்குகின்றனர். அதில் ஒரு கதையை நந்தினி ரெட்டி இயக்குகிறார். இதில் அமலா பால், ஜெகபதி பாபு நடிக்கின்றனர். மற்ற கதைகளை தருண் பாஸ்கர்,  சந்தீப் வங்கா, சங்கல்ப் ரெட்டி இயக்குவார்கள் என்று தெரிகிறது.

Tags :
× RELATED சிவாஜி பட டைட்டிலில் புதுபடம்