×

தீபாவளி ரிலீஸ் போட்டியில் முந்தப்போவது யார்?

தீபாவளி தினத்திற்காக திரைப்பட ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். விஜய் நடித்துள்ள பிகில், கார்த்தி நடித்துள்ள கைதி, விஜய் சேதுபதி நடித்திருக்கும் சங்கத்தமிழன் ஆகிய 3 படங்கள் தீபாவளி ரிலீஸ் ரேசில் உள்ளது. ஆனால் இப்படங்கள் ஒரே நாளில் வெளியாகுமா? வெவ்வேறு நாட்களில் வெளியாகுமா என்பதில் குழப்பம் நிலவுகிறது. தீபாவளி அக்டோபர் 27ம்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை.

அன்று படங்களை வெளியிட்டால் முதல் இரண்டு நாட்கள் அதாவது வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை வசூல் வராது. வழக்கமாக எல்லா படங்களும் வெள்ளிக்கிழமைதான் ரிலீஸ் செய்யப்படுகிறது. அந்த பாணியை இம்முறை பின்பற்றினால் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே அதாவது 25ம் தேதியே 3 படங்களும் வெளியாக வேண்டும்.

2 நாள் வசூலை இழக்க விரும்பாததால் ரிலீஸ் செய்வதில் தயாரிப்பாளர்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது. அநேகமாக விஜய்யின் பிகில் தீபாவளிக்கு 3 நாள் முன்னதாக 24ம் தேதியே (வியாழக்கிழமை) ரிலீஸ் ஆகவும் வாய்ப்பிருக்கிறது. தியேட்டர் பற்றாக்குறை ஏற்பட்டால் மற்ற 2 படங்களில் ஏதாவது ஒரு படம் ஒரு வாரம் தள்ளி வெளியாகவும் வாய்ப்பிருக்கிறது.

Tags : Diwali Release Contest ,
× RELATED ஊரடங்கில் உருவான கொரோனா வைரஸ் படம்