×

உலககோப்பையை திருடற கூட்டம்

விலை மதிப்பு மிக்க வைரத்தை திருடுவது, டிரக் நிறைய வரும் பணத்தை திருடுவது என்றுதான் கதைகள் வந்திருக்கின்றன. ஆனால் உலக கோப்பையை திருடும் கதையை யோசித்திருக்கிறார் ஒரு இயக்குனர். இப்படத்துக்கு, ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.
இதுபற்றி பட இயக்குனர் சுதர் கூறும்போது,’இப்படியொரு கதையை சொன்னவுடன் நடிகர்கள் ஆச்சர்யப்பட்டார்கள், ஆர்வமாக கதையையும் கேட்டனர். கிரிக்கெட் உலக கோப்பையை திருடுவதே ஒரு தனித்துவமான யோசனைதான்.

இதில் காட்சிகள் எல்லாமே புதிதாக இருக்கும். வழக்கமான சென்டிமென்ட், காதல் காட்சிகள் போன்ற வை இதில் கிடையாது. மிகவும் சிறப்பான அம்சம் இப்படத்துக்க அமைக்கப்பட்டி ருக்கும் மியூசியம் அரங்கு. ெவண்கல சிற்பங்களை கொண்டு துல்லியமாக மியூசியம் அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் பார்த்திபன், கயல் சந்திரன், சத்னா டைட்டஸ், சாம்ஸ், டேனியல் நடித்திருக்கின்றனர். டு மூவி பப்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்டிசி பிக்சர்ஸ் இம்மாதம் வெளியிடுகிறது’ என்றார்.

Tags : World Cup ,
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது