×

என்னை கல்யாணம் கட்டுவது ஈஸி இல்லை; காஜல் அகர்வால் ரகளை

காஜல் அகர்வால் என்னென்ன படங்களில் நடிக்கிறார் என்பதை சொல்லி கொண்டிருக்கும் போதே அவரிடம், ‘உங்க கல்யாணம் எப்போது?’ என்ற கேள்வியும் சேர்ந்தே கேட்கப்படுகிறது. சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு காஜல் பதில் அளித்தார். அதில் ஒரு ரசிகர் குறும்புத்தனமாக, உங்களை கல்யாணம் கட்டிக்கணும் சம்மதமா என்று கேட்டு அதிர்ச்சி தந்தார்.

34 வயதாகும் காஜல் அகர்வால் இன்னும் கதாநாயகியாகவே முன்னணி ஹீரோக் களுக்கு ஜோடிபோட்டு வருகிறார். அதற்கேற்ப தனது உடற்கட்டை ஸ்லிம் தோற்றத்தில் பராமரிக்கிறார். திருமணத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதா என்று காஜலிடம் ஒருவர் கேட்டபோது,’ திருமண உறவின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நானும் திருமணம் செய்ய தயாராகவே இருக்கிறேன். நேரம் வரும்போது அதுபற்றி அறிவிப்பேன்.

அவரது இந்த பதில் சீக்கிரமே காஜலுக்கு திருமணம் நடக்குமோ, அப்படியென்றால் மாப் பிள்ளை யாராக இருப்பார் என்ற கிசுகிசுக்களை எழுப்பி இருக்கிறது. குறும்புக்கார ரசிகர் ஒருவர் என்னை நீங்கள் திருமணம் செய்துகொள்வீர்களா என்றார். அதைக் கேட்டு டென்ஷன் ஆகாமல் ஆறஅமர பதில் அளித்தார்.கொஞ்சம் முயற்சி செய்துதான் பாருங்களேன், ஆனால் அது அவ்வளவு ஈஸி இல்லை என்று ரகளையாக பதில் அளித்தார் காஜல் அகர்வால்.

Tags : Kajal Agarwal ,
× RELATED காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை