×

வயசென்ன வயசு... டோன்ட் கேர் ஜெனிலியா ரீஎன்ட்ரிக்கு திட்டம்

சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜெனிலியா. அவரது அப்பாவித்தனமான நடிப்பு அனைத்து தரப்பினைரையும் கவர்ந்தது. திடீரென்று இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முகை மணந்து இல்லறத்தில் செட்டிலாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் ஆகிவிட்டார். குழந்தை குட்டியாயிடுச்சி இனிமேல் நடிக்க வரமாட்டார் என்று கருத்தப்பட்ட நிலையில் மீண்டும் நடிக்க வருவதாக அறிவித்து தனது ரசிகர்களை குளிரச் செய்திருக்கிறார்.

இதுபற்றி ஜெனிலியா கூறியது: வாழ்க்கையில் வித்தியாசமான பல்வேறு தருணங்களை நான் கடந்து வந்திருக்கி றேன். நடிப்புதான் உலகம் என்ற நிலையிலிருந்து மாறி குடும்ப தலைவியாக, பிஸி யான தாய் ஆக என பல அனுபவங்கள்... தற்போது மீண்டும் நடிக்க வருவதுபற்றி திட்டமிட்டு வருகிறேன். அதற்கான ஸ்கிரிப்ட் கேட்டு வருகிறேன்.
 
வாழ்க்கையில் தாய் என்ற அந்தஸ்த்தை அடைந்தது மிக அருமையான தருணம். எனது குழந்தைகள், கணவருடன் எனது வாழ்க்கையை சரியாக வாழ்ந்துக்கொண் டிருக்கிறேன். வருடத்துக்கு வருடம் வயது ஏறிக்கொண்டே போகிறதே அதுபற்றி கவலையில்லையா என்கிறார்கள். வயசென்ன வயசு.. வயது என்பது ஒரு நம்பர் (எண்) மட்டுமல்ல அதுவொரு சலுகை, அவ்வளவுதான். ஆனால் மீண்டும் நான் நடிக்க வரும்போது புதியதாக ஒன்றை என்னால் காண முடியும் என்று எண்ணுகிறேன்.

Tags :
× RELATED மீண்டும் தொழில் தொடங்கவா... இருக்கும்...