×

பச்சைக்கிளி முத்துச்சரம்...

எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தவர் ஜப்பான் நடிகை மேத் ரூன்கிராட். தற்போது இவருக்கு 76 வயது ஆகிறது. சமீபத்தில் அவரது புகைப்படம் நெட்டில் வெளியாகி எம்ஜிஆர் ரசிகர்களை உலகம் சுற்றும் வாலிபன் பட நினைவுகளுக்கு இழுத்துச் சென்றது. இப்போது விஷயம் அதுவல்ல. வெளிநாட்டு நடிகைகள் பலர் கோலிவுட் படங்களில் நடித்திருக்கின்றனர். ஒரு பாடலுக்கு ஆடிவிட்டு காணாமல் போயிவிடுகின்றனர் அல்லது ஒரு சில படங்களில் நடித்துவிட்டு மாயமாகிவிடுகின்றனர்.

நாகார்ஜுனா, கார்த்தி நடித்த தோழா படத்தில் ‘டோர் நம்பர்’ பாடல், பாகுபலியில் ‘மனோஹரி’ பாடலுக்கும் கவர்ச்சி ஆட்டம் ஆடி இந்த கவர்ச்சி சிட்டு யார் என கேட்க வைத்தவர் நோரா பதேகி. தொடர்ந்து பல படங்களில் குத்து பாடலுக்கு மட்டுமே கால்ஷீட் தருகிறார். இவர் கனடா நாட்டை சேர்ந்தவர். ஆனாலும் மும்பையில் தங்கி பாலிவுட், தென்னிந்திய படங்களுக்கு கால்ஷீட் தந்துக்கொண்டிருக்கிறார்.

கொஞ்சம் காசுபார்த்தால் கட்டுப்பாடில்லாமல் திண்று உடலை பருமானாக்கிக் கொள்ளும் நடிகைகளுக்கு மத்தியில் கைநிறைய காசு பார்த்தும் தனது உடற் கட்டை பராமரிப்பதில் அக்கறை காட்டுகிறார் நோரா. சில தினங்களுக்கு முன் நியான் கிரீன் எனப்படும் கண்ணை பறிக்கும் பச்சை நிற காஸ்டியூமில் படத்தை வெளியிட்டு ரசிகர்களை தனது கவர்ச்சியில் கட்டிப்போட்டார். அவரது கிக்கான போஸை கண்ட ரசிகர்கள் சிலர் ஜொள்ளுஸ்களாகிவிட்டனர்.

Tags :
× RELATED கொரோனாவால் பாதுகாப்பற்ற தன்மை......! ராஷ்மிகா