×

காதலில் விழுந்த ரஜினி ஹீரோயின்

காலா படத்தில் ரஜினிகாந்த்தை காதலித்து திருமணம் செய்துகொள்ளாமல் பிரிந்து செல்லும் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஹுமா குரோஷி. தற்போது நிஜவாழ்வில் காதலில் விழுந்திருக்கிறார். பாலிவுட் இளம் இயக்குனர் முடாஸ்ஸர் அஸிஸ். இவரும் ஹுமாவும் காதலிப்பதாக கிசுகிசு பரவி வந்தது. இதை இருவரும் உறுதி செய்யாமலிருந்தனர். இந்நிலையில் முடாஸ்ஸர் பிறந்த நாளில் ஹுமா தனது காதலை உறுதி செய்திருக்கிறார். முடாஸ்ஸரின் பிறந்தநாளில் அவர் வெளியிட்டிருக்கும் மெசேஜில்,’பல்வேறு எண்ணங்கள் முடாஸ்ஸர்...

அதில் பயணிப்பது பெரிய சவாலாகவே இருக்கிறது. உன்னையும், நீ செய்யும் ஒவ்வொரு செயலையும் கண்டு நான் பெருமை கொள்கிறேன். உனது கனவுகள் நனவாக வேண்டும் என்று என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து பிரார்த்திக்கிறேன். காதலுடன் உனக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். எப்போதும் மகிழ்ச்சியாக, சிரித்த முகத்துடன் இரு’ என குறிப்பிட்டிருக்கிறார்.

ஹுமாவின் மனம் உருகும் மெசேஜிக்கு பதில் அளித்திருக்கும் முடாஸ்ஸர்,’அன்பே உனது வார்த்தைகளுக்கு பதில் அளிப்பது கடினமாக உள்ளது. என் இதயம் கவர்ந்த தேவதை நீதான். வேறுயாரிடமிருந்தாவது எனக்கு பாராட்டு வரும் என்று நான் எதிர்பார்ப்பது தவறு. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. உனக்கு நான் நன்றி சொல்லப்போவதில்லை. ஏனென்றால் அது மட்டும் போதாது. உனது இதமான காதல் எவ்வளவு அதிசயமாக உள்ளது. உனக்கு உண்மையாக இருப்பேன். காதலுடன்....’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Rajini ,
× RELATED ரஜினி பட வில்லனிடம் விவாகரத்து கேட்ட மனைவி