×

இலியானா காலில் மர்மமான காயங்கள்; பேய் சேட்டையா?

இலியானா கொஞ்ச நாட்களாகவே பயத்திலிருக்கிறாராம். பட வாய்ப்புகள் இல்லை என்ற பயம் ஒருபக்கம் இருந்தாலும் வாய்ப்புகளை பெறுவதற்கான முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். பாகல்பந்தி இந்தி படத்தில் தற்போது நடித்து வருகிறார். தவிர தெலுங்கு படமொன்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் டுவிட்டர் பக்கத்தில் அவர் அதிர்ச்சிகரமான ஒரு பதிவிட்டிருக்கிறார்.

அதில் ‘இரவில் தூங்கி எழுந்து காலையில் பார்த்தால் எனது காலில் மர்மமான முறையில் காயங்கள் இருக்கின்றன. இது ஏன், எப்படி நடக்கிறது? என்பது புரியாத புதிராக இருக்கிறது. ஒரு வேலை எனக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருக்குமோ? என்று சந்தேகம் இருக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.

இலியானாவின் இந்த மெசேஜை பார்த்த ரசிகர்கள் சிலர் அவரை கலாய்த்து வருகின்றனர். ‘கான்ஜூரிங் ஹாலிவுட் படத்தில் வரும் சம்பவம்போல் உங்களது பிரச்னை இருக்கிறது. ஒரு வேலை இது பேயின் சேட்டையாக இருக்குமோ?’ என்று தெரிவித்துள்ளனர். இன்னும் சிலரோ, ‘நொறுக்கு தீனி திண்பதற்காக இரவில் ஒருவேலை ஃபிரிட்ஜ் பக்கம் சென்று காயப்பட்டு வருவீர்கள்’ என்று நினைக்கிறேன் எனவும் இலியானாவை ஓட்டி வருகின்றனர்.

Tags : Iliana ,
× RELATED புதுக்கோட்டையில் குளக்கரையில்...