×

பாய் ஃபிரண்டுடன் நடிகை ஜாலி

முதல்வன் படத்தில் ஷக்கலக்க பேபி பாடலுக்கு ஆடி கலக்கிய சுஷ்மிதா சென் முன்னதாக ரட்சகன் படத்தில் நாகார்ஜுனா ஜோடியாக கவர்ச்சியில் ஈர்த்தார். இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கும் அவர் இளமையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். திருமணம் செய்யாமலே காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தவர் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தனிமையில் காலத்தை கழிக்க முடியாது என்பதை உணர்ந்தவர் தற்போது ரோஹ்மேன் ஷா என்பவரை காதலித்து வருகிறார்.

திருமணம் எப்போது என்று இருவரும் இன்னும் முடிவு செய்யாவிட்டாலும் லிவிங் டு கெதர் பாணியில் வசித்து வருகின்றனர். சமீபத்தில் பாய் ஃபிரண்ட் ரோஹ்மேன் உடன் மாலத்தீவு சென்று ஜாலியாக பொழுதை கழித்தார் சுஷ்மிதா.

இரவில் அணிந்த குட்டை கவுனுடன் விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் கடற்கரை பகுதியிலும், அங்கிருக்கும் மரங்கள் அடர்ந்த பசுமை வெளிகளிலும் சுற்றித்திரிந்தவர் ஹாயாக ஒரு மரத்தின் கிளையில் சாய்ந்தபடி புகைப்படம் எடுத்து வெளியிட்டார். அத்துடன் அவர் வெளியிட்டுள்ள மெசேஜில் இதுபோன்ற காலைப்பொழுதில் உண்மையாக வாழும்போது எவ்வளவு பொலிவு இருக்கிறது. விடியல், இந்த மணல், இந்த கடல்... வாழ்க்கையே மகிழ்ச்சியாக இருக்கிறது.. ஐ லவ் யூ கய்ஸ்!’ என குறிப்பிட்டிருக்கிறார்.

Tags : Actress ,
× RELATED 2 மாதமாக அபுதாபியில் தவிக்கும் நடிகை