×

அனிதா பட விவகாரத்தில் தயாரிப்பாளர் - இயக்குனர் மனஸ்தாபம்

பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்து மருத்துவர் ஆகும் லட்சியத்திலிருந்த அனிதா, நீட் தேர்வால் நிராசையாகி உயிர் நீத்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை மையமாக வைத்து ‘டாக்டர் அனிதா எம்பிபிஎஸ்’ பெயரில் படம் உருவாக்கவிருப்பதாக தகவல் வந்தது. வி.ராஜ கணபதி, எஸ்.பாலாஜி தயாரிக்க, எஸ்.அஜய்குமார் இயக்க திட்டமிடப்பட்டது.

தற்போது தயாரிப்பாளரும் இயக்குனரும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இதுசம்பந்தமாக தயாரிப்பாளரும் தற்போது படததை இயக்கும் ராஜகணபதி கூறும்போது,’ டாக்டர் அனிதா எம்பிபிஎஸ் படம் இயக்குவதற்கு முன் அனிதா குடும்பத்தாரின் அனுமதி பெற வேண்டும், அனிதா குடும்பத்திற்கும், தயாரிப்பாளருக்கும் படத்தின் ஸ்கிரிப்ட்டை தர வேண்டும் என்று இயக்குனருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

ஆனால் அது நடக்கவில்லை. இதையடுத்து இயக்குனரிடமிருந்து விலகி அனிதா குடும்பத்தாரிடம் அனுமதி பெற்ற பிறகு படம் எடுக்க முடிவு செய்யப்பட்டது. அனிதா குடும்பத்தாரிடம் தொடர்ந்து பேசி அவர்களின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதில் அனிதாவின் தந்தையாக நான், அண்ணனாக எஸ்.ராஜன் நடிக்க உள்ளனர்’ என்றனர்.

Tags : Manithappam ,Producer - Director ,Anitha Film Affairs ,
× RELATED கொரோனாவால் பாதுகாப்பற்ற தன்மை......! ராஷ்மிகா