விளையாட்டில் முதலீடு செய்யும் நடிகை

கோலிவுட், டோலிவுட் படங்களில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் சமீபகாலமாக தனது பார்வையை பாலிவுட் பக்கம் திருப்பியிருக்கிறார். ஒரு பக்கம் சினிமாவில் நடித்து சம்பாதிக்கும் ரகுல் அடுத்து பிஸ்னஸிலும் கணிசமாக வருமானம் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே விசாகப்பட்டினம் உள்ளிட்ட இரண்டு இடங்களில் ஜிம் (உடற்பயிற்சிகூடம்) நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ஐதராபாத்தை மையமாக கொண்டு செயல்படும் உடற்பயிற்சி கூடத்தின் பங்குகளை அதிகளவில் வாங்கியிருக்கிறார். உடற்பயிற்சி கூட முதலீடையடுத்து தற்போது டென்னிஸ் கிளப் அணியை வாங்கியிருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட் அணிகளை வாங்கியிருக்கும் நடிகைகள் பிரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி போல் ரகுலும் விளையாட்டு துறையில் முதலீடு செய்திருக்கும் நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

Related Stories: