கங்கனா ரனவத் திடீர் உத்தரவு

ஏ.எல்.விஜய் இயக்கும் படம், தலைவி. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சொல்லும் இதில், ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனவத் நடிக்கிறார். இதற்காக அவர் பரத நாட்டியம் கற்பதுடன், தமிழில் பேசவும் பயிற்சி பெறுகிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இதற்கு தமிழ் மற்றும் தெலுங்கில் தலைவி என்று பெயரிட்டு உள்ளனர். இந்திக்கு ஜெயா என்று பெயரிட ஆலோசித்தனர். ஆனால், தலைவி என்ற பெயரே பொருத்தமாக இருக்கும் என்று கங்கனா ரனவத் வற்புறுத்தியதால், இதே பெயரை சூட்ட முடிவு செய்துள்ளனர்.

Tags :
× RELATED நானும் சிங்கிள்தான்