இளையராஜா இசையில் விஷால்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த படம் துப்பறிவாளன். சமந்தா ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் வரவேற்பை பெற்றதையடுத்து இதன் 2ம் பாகம் உருவாக்குவது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அதற்கான பணிகள் நிறைவடைந்ததையடுத்து படப்பிடிப்புக்கான பணிகள் தொடங்கியிருக்கின்றன. துப்பறிவாளன் 2ம் பாகத்திற்கு இளையராஜா இசை அமைக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் மிஷ்கின், விஷால், அவரது தந்தை ஆகியோர் இளையராஜாவை சந்தித்து பேசியதுடன் அட்வான்ஸும் தந்து தங்கள் படத்துக்கு இசை அமைக்க இளையராஜாவிடம் உறுதி செய்துகொண்டனர். இப்படத்தில் நடிக்கும் ஹீரோயின் மற்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று பட தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Vishal ,
× RELATED விஷாலுடன் மோதும் விஜய்சேதுபதி