இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட பூர்ணா

செல்போன்களில் வரும் சில விபரீத விளையாட்டுகளை விளையாடும் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்திருக்கிறது. அதை மையமாக வைத்து, ‘ப்ளுவேல்’ பெயரில் படம் உருவாகிறது. பூர்ணா ஹீரோயினாக நடிக்கிறார்.  டி.ரங்கநாதன் இயக்குகிறார். டி.மது, பி.அருமைசந்திரன் தயாரிக்கின்றனர். கிருஷ்ணகுமார் ஒளிப்பதிவு. கணேஷ் ராகவேந்திரா இசை. இதில் மாஸ்டர் கப்ஹிஸ்கண்ணா, பிர்லா போஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் நடித்தது பற்றி பூர்ணா கூறியதாவது: ஒரு தமிழ்படத்தை ஆங்கில டைட்டிலுடன் ஏன் உருவாக்குகிறார்கள் என்று ஆச்சர்யப்பட்டேன்.

ஸ்கிரிப்டை படித்தேன். ஆனாலும் படக்குழு மீது எனக்கு சமரசம் ஏற்படவில்லை. முதல்நாள் படப்பிடிப்புக்கு சென்றபோது பெரிய அளவில் விளக்குகளோ, ஆட்களோ இல்லை. இதில் அப்செட் ஆகி மறுநாள் படப்பிடிப்புக்கு செல்லாமல் தவிர்த்தேன். பிறகு தயாரிப்பாளர், இயக்குனர் என்னிடம் பேசி படம்பற்றி விளக்கினார்கள். பிறகு படக் குழுவுடன் ஒரு குடும்பமாக இணைந்து பணியாற்றினேன். படத்தின் டிரெய்லரை பார்த்தபோதுதான் இவ்வளவு அருமையான படத்தில் நடிப்பதற்கு தயங்கியதை எண்ணி வெட்கம் அடைந்தேன். அதற்காக இயக்குனரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன்’ என்றார்.

Tags : Poorna ,
× RELATED ‘காலா’ இயக்குனரின் அடுத்த படம்