‘காலா’ இயக்குனரின் அடுத்த படம்

ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித் சமீபகாலமாக சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கூறி  வம்பில் சிக்கிக்கொள்கிறார். இதுவொரு பக்கமிருந்தாலும் தனது திரையுலக பங்களிப்பையும் தவறாமல் செய்து வருகிறார். அடுத்து பா.ரஞ்சித், இந்தி படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக போராடிய பழங்குடியின போராட்டக்காரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகவிருப்பதாகவும் இதில் ஆமிர்கான் நடிப்பார் என்றும் தகவல் வெளியானது. இந்தி படம் இயக்குவதற்கு முன்னதாக மற்றொரு தமிழ் படம் இயக்கவிருக்கிறார் பா.ரஞ்சித். குத்துச் சண்டையை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் ஆர்யா நடிக்கவிருக்கிறார். அட்டகத்தி தினேஷும் இதில் இணைந்து நடிக்க உள்ளாராம்.

Tags : Kala ,
× RELATED கேஜிஎஃப் இயக்குனரின் படத்தில் மகேஷ் பாபு?