விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்தி நடிகை

பாலிவுட்டில் பல படங்களில் நடித்தவர் கல்கி கொயச்லின். இவர் முதல்முறையாக தமிழில் நடிக்க வருகிறார். கவுதம் மேனன், வெற்றி மாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் ஒரு வெப்சீரிஸின் 4 பகுதிகளை தனித்தனியே இயக்க உள்ளனர். இதில் விக்னேஷ் சிவன் இயக்கப்போகும் பகுதியில்தான் கல்கி நடிக்க இருக்கிறார்.

தமிழில் உருவாகும் இந்த வெப்சீரிஸ் இன்றைய இளைஞர்களை கவரும் விதமான கதையம்சத்துடன் உருவாக இருக்கிறது. அக்டோபரில் இதற்கான ஷூட்டிங் தொடங்குகிறது. இந்த வெப்சீரிஸை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார்.

Tags : Vignesh Shiva ,
× RELATED இந்திக்கு வக்காலத்து வாங்கும் கங்கனா