காலை செங்குத்தாக தூக்கி ஆட முடியுமா? நடிகை சவால்

விக்ரமுடன் சாமுராய், விஜய்யுடன் சுக்ரன். மனோஜ் உடன் வருஷமெல்லாம் வசந்தம் போன்ற படங்களில் நடித்தவர் அனிதா ஹம்சநந்தினி. பின்னர் தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்றவர் சுமார் 30 படங்களில் நடித்தார். 3 வருடமாக பட வாய்ப்பில்லாமல் இருந்தவர் அதற்காக வீட்டில் முடங்கிவிடாமல் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். மீண்டும் சினிமா ஆசை துளிர்விட்டது. அதை வெளிப்படுத்துவதற்கு ஒரே வழி இணைய தளத்தில் திறமையை பகிர்வது தான் என்று முடிவு செய்தார்.  குட்டையான ஷார்ட்ஸ், சிக்கென பிடித்துக்கொண்டிருக்கும் கச்சை அணிந்தவர், ‘போல் டான்ஸ்’ திறமையை வெளிப்படுத்தினார்.

இரும்பு கம்பியை இரண்டு கைகளிலும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு ஒரு காலை தரையிலும் மற்றொரு காலை செங்குத்தாக உயரமாகவும் உயர்த்தி ஆடும் நடனத்தை ரசிகர்கள் கண்குளிர பார்ப்பதற்காக நெட்டில் பகிர்ந்திருக்கிறார். இது ரசிகர்களுக்கு மட்டுமல்ல இயக்குனர்களின் பார்வைக்கும்தான் என்பதுபோல் நமட்டு சிரிப்பும் சிரிக்கிறார். அவரது இந்த கவர்ச்சி ஆட்டம் மீண்டும் பட வாய்ப்பை பெற்றுத்தருமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags :
× RELATED ‘அந்த’ இடத்தில் மறைத்து வைத்திருந்த...