×

விஷால் திருமணம் என்னாச்சி...

நடிகர் சங்க கட்டிடம் கட்டியபின்தான் தனது திருமணம் நடக்கும் என்று கடந்தமுறை நடிகர் சங்க பொதுச் செயலாளராக பதவி ஏற்றபோது விஷால் அறிவித்தார். கட்டிட பணிகளும் நடந்து வருகிறது. பல்வேறு பிரச்னைகள் காரண மாக இன்னும் முடிவடையவில்லை. 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் சங்கத்துக்கு அடுத்த தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. கோர்ட் உத்தரவால் ஓட்டு எண்ணிக்கை தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் விஷாலுக்கும் ஆந்திர தொழில் அதிபர் மகளும், நடிகையுமான அனிஷாவுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அக்டோபர் மாதம் திருமணம் நடக்கவிருப்ப தாக ெதரிவிக்கப்பட்டது. இருகுடும்பத்தினரும் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். இந்நிலையில் விஷால் திருமணம் பற்றி கடந்த 2 நாட்களாக வதந்தி பரவிவருகிறது. அனிஷாவுடனான நிச்சயதார்த்த நிகழ்வுகளை விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களாக பகிர்ந்திருக்கிறார்.

அதேபோல் அனிஷாவும் புகைப்படங்கள் பகிர்ந்திருந்தார். திடீரென்று அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து விஷாலுடன் இருந்த புகைப்படங்களை நீக்கி இருக்கிறார். இதனால் ஏற்பட்ட குழம்பம் தான் விஷால்-அனிஷா திருமணம் நடக்குமா என்ற கேள்வியை திரையுலக வட்டாரத்தில் எழுப்பி உள்ளது. இதுகுறித்து இருதரப்பிலி ருந்தும் உறுதியான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. உண்மை என்ன என்பது சீக்கிரம் தெரியவரும்.

Tags :
× RELATED சோனியா அகர்வால் நடிக்கும் தண்டுபாளையம்