×

அஜீத் - குற்றாலீஸ்வரன் சந்திப்பு

பெப்பர் சால்ட் தோற்றத்தில் நடித்து வந்த அஜீத், விஸ்வாசம் படத்தில் முழுமையாக வெள்ளை நிற ஹேர்ஸ்டைலுடன் நடித்தார். தாடி, மீசை சகிதமாக கரடுமுரடமாக அப்படத்தில் தோற்றம் தந்த அஜீத் நேர் கொண்ட பார்வை படத்தில் கோட்டு சூட்டுடன் டிப் டாப் ஆக நடித்தார். தற்போது கிளீன் ஷேவ் செய்து, ஹேர்ஸ்டைலையும் குறைத்து புதிய தோற்றத்துக்கு மாறியிருக்கிறார் அஜீத்.

ரசிகர்கள் நீண்ட நாட்களாக அவரது இந்த தோற்றத்தைத்தான் எதிர்பார்த்து வந்தார்கள். அவர்களின் ஆசையை தனது அடுத்த படத்தில் பூர்த்தி செய்வதற்காக  ஹேர்ஸ்டைலை மாற்றி ஸ்லிம் தோற்றத்துக்கு அஜீத் மாறி வருகிறார்.

சமீபத்தில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வான அஜீத் இயற்கையிலேயே விளையாட்டு விரும்பி என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவிற்காக பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பெருமை சேர்ந்த குற்றாலீஸ்வரன் சமீபத்தில் அஜீத்தை சந்தித்தார். அவரை பாராட்டிய அஜீத் இன்னும் பல சாதனைகள் செய்ய வாழ்த்து தெரிவித்தார்.

Tags :
× RELATED அமானுஷ்ய கதை பிஹைண்ட்