ஐஸ்வர்யாவை திணறடித்த காய்ச்சல்

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வந்த ஜுரத்தைவிட அதற்கு சிகிச்சை பெற்றதற்காக வந்த பில் நடுக்கத்தை ஏற்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி மெய் பட நிகழ்ச்சியல் அவர் கூறும் போது,’மருத்துவ துறை சம்பந்தப்பட்ட த்ரில்லர் படமாக இது உருவாகிறது. இப்படத்திற்கு என்னை அணுகிய போது ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. ஒருமுறை காய்ச்சல் ஏற்பட்டதால் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு சென்றேன். மருத்துவர்களின் கட்டாயத்தால் பலமுறை தேவையற்ற பரிசோதனைகள் செய்தேன்.

இந்த சிகிச்சைக்காக 1 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தினேன். மருத்துவ துறையில் இருக்கும் இதுபோன்ற முறைகேடுகள் களையப்பட வேண்டும் என்பதே இப்படத்தின் கருவாக அமைந்திருந்தது. அதனாலேயே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்’ என்றார். மெய் படத்தை எஸ்.ஏ.பாஸ்கரன்  இயக்குகிறார். இவர் கமல்ஹாசன், சித்திக், ஜீத்து ஜோசப் ஆகியோரிடம் உதவி  இயக்குனராக பணியாற்றி உள்ளார். நிக்கி சுந்தரம் ஹீரோவாக  அறிமுகமாகிறார்.

Tags :
× RELATED ஆக்‌ஷனுடன் கிளுகிளுப்பு!