சன்னியாசி ரைசா

மாடல் அழகி ரைசா, வேலையில்லா பட்டதாரி 2ம் பாகத்தில் முகத்தை காட்டினார். அடுத்து, பியார் பிரேமா காதல் படத்தில் தன்னை உரித்துக் காட்டிவிட்டார். அதாங்க... காதல் காட்சி, லிப் டு லிப், படுக்கை அறை காட்சிகளில் நடித்து மாடர்ன் கேர்ள் கதாபாத்திரத்தில், நான் யார்? என்னுடைய நடிப்பு எப்படி? என்று தனது சேட்டையை காட்டினார். தற்போது இன்ஸ்டாகிராமில் தினமும் தனது சேட்டைகளை பகிர்ந்து வருகிறார். வாக்கிங் செல்வது முதல் டென்னிஸ் பயிற்சி வரை எல்லாவற்றையும் ஷேர் செய்து வருகிறார்.

திடீரென்று ஜரிகை பார்டர் போட்ட வெள்ளை சேலை உடுத்தி, கழுத்தில் உத்திராட்சம்போல் நீண்ட மாலை அணிந்து தியானம் செய்து அருளாசி வழங்கும் சன்னியாசி கோலத்தில் புகைப்படத்தை வெளியிட்டார். அதைக்கண்டதும் இது எந்த படத்துக்கான கோலம், இல்லாவிட்டால் நிஜமாகவே சன்னியாசியாகிட்டீங்களா? என்று அவரை கலாய்க்கின்றனர். யார் என்ன சொன்னாலும் ஆத்திரப்படாமல் நிஜ சாமியார்போல் மவுனம் கடைபிடித்து வருகிறார் ரைசா.

Tags :
× RELATED படம் இயக்குவேன்: வெற்றி