×

மருத்துவத்துறை முறைகேடுகளை பற்றிய மெய்

அமெரிக்காவில் நடிப்புக் கல்லூரியில் பயின்ற நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் படம், மெய். அவருக்கு ஜோடி ஐஸ்வர்யா ராஜேஷ். ஆடுகளம்  கிஷோர், சார்லி, அஜய் கோஷ் நடிக்கின்றனர். சுந்தரம் புரொடக்‌ஷன் தயாரிக்கிறது. ஒளிப்பதிவு, மோகன். இசை, பிருத்வி குமார். இயக்குனர்கள் சித்திக், ஜீத்து ஜோசப் உதவியாளர் எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்குகிறார்.

அவர் கூறுகையில், ‘மெய் என்பது உடல். மருத்துவத்துறையில் நடக்கும் வெளியில் தெரியாத சில முறைகேடுகளை பற்றி படம் பேசுகிறது. இன்று விற்கப்படும் மருந்து, நாளை புதிய நோயை உருவாக்குகிறது என்பது படத்தின் கரு. முதலில் புதுமுகத்துடன் நடிக்க தயங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், கதை பிடித்ததும் நடிக்க சம்மதித்து, மருந்து விற்பனை பிரதிநிதி வேடம் ஏற்றுள்ளார்’ என்றார்.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!