அந்தாதுன் ரீமேக்கில் பிரஷாந்த்

இந்தியில் வெளியாகி ஹிட்டான படம் அந்தாதுன். ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடித்திருந்தனர். இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை தியாகராஜன் தயாரிக்கிறார். இதில் ஆயுஷ்மான் குரானா வேடத்தில் பிரஷாந்த் நடிக்க உள்ளார். இது குறித்து தியாகராஜன் கூறும்போது, ‘அந்தாதுன் கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது.

பிரஷாந்த் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரி மாணவர் என்பதாலும், கைத்தேர்ந்த பியானோ கலைஞர் என்பதாலும் இந்த கதாபாத்திரம்  அவருக்கு பொருந்தும்’ என்றார். இப்படத்திற்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.  இயக்குனர், பிற நடிகர்கள், தொழிட்நுட்ப வல்லுனர்கள் தேர்வு நடைபெற்று  வருகிறது. படக்குழு முடிவானவுடன் விரைவில் படப்பிடிப்பும்  துவங்கும்.

Tags :
× RELATED கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்