தந்தை சமாதியில் என்னை புதைக்க வேண்டும்

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ரேகா. கடலோர கவிதைகள் ரேகா என்றால் எல்லோருக்கும் புரியும். சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். ஹீரோயினாக நடிக்க வந்தவர் தற்போது அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். அவர் கூறும்போது,’நான் சினிமாவில் நடிக்க வந்தது எனது அப்பாவுக்கு பிடிக்கவில்லை. நான் நடித்த ஒரு படத்தை மட்டுமே பார்த்தார்.

அதன்பிறகு வேறு எந்த படத்தையும் பார்க்கவில்லை. அவரது அன்பு ஒரு வருடம் எனக்கு கிடைக்காமல்போனது. பின்னர் என் மீது அன்பு செலுத்தினார். சில வருடங்களுக்கு முன் அவர் இறந்தார். அவர் கல்லறையில் புதைக்கப்பட்டிருக்கிறார். அந்த சமாதியை பராமரித்து வருகிறேன். நான் இறந்த பிறகு என்னை அந்த சமாதியில்தான் புதைக்க வேண்டும்’ என உருக்கமாக கூறினார் ரேகா.

Tags :
× RELATED உலககோப்பையை திருடற கூட்டம்