அடுத்தடுத்து தோல்வி டென்ஷனில் நயன்தாரா

ஹீரோக்கள் இல்லாமல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் அதிகம் நடித்து வருபவர் நடிகை நயன்தாரா. அவர் நடித்த மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் போன்ற படங்கள் வெற்றி பெற்றன. இந்தவெற்றியை அவரால் தொடர்ந்து தக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டதால் டென்ஷனில் ஆழ்ந்திருக்கிறாராம். சமீபத்தில் நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் திரைக்கு வந்தது. முன்னதாக திரைக்கு வரவே இப்படம் போராடிக்கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் ரிலீஸ் ஆகாத நிலை இருந்து வந்தது. 5 முறைக்கும்மேல் இதுபோன்ற பிரச்னை எழுந்த நிலையில் ஒரு வழியாக சமீபத்தில் வெளியானது. அதற்கு முன்னதாக நயன்தாராவின் ஹாரர் த்ரில்லரான ஐரா மற்றும் மிஸ்டர் லோக்கல் படங்கள் வெளியாகின.

இவை வரிசையாக நயன்தாராவுக்கு தோல்வி படங்களாக அமைந்தது. இது அவருக்கு டென்ஷனை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் நயன்தாராவை வைத்து சோலோ ஹீரோயின் படங்கள் எடுக்க இயக்குனர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

தோல்வி டென்ஷனை எல்லாம் மறந்து அடுத்து நடிக்கும் படங்கள் வெற்றி பெற வேண்டும், விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் சமீபத்தில் காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசித்தார் நயன்தாரா. தற்போது ரஜினியுடன் தர்பார், விஜய்யுடன் பிகில், தெலுங்கில் சிரஞ்சீவி யுடன் செ ரா நரசிம்ம ரெட்டி படங்களில் நடித்து வருகிறார். இப்படங் களின் வெற்றிதான் நயன்தாராவை ஆறுதல் படுத்தும் என்கிறார்கள்.

Tags :
× RELATED திரிஷா நடிக்கும் ராம்