×

‘திருமணம் செய்ய மாட்டேன்’ வரலட்சுமி திடீர் முடிவு

நடிகைகளில் சிலர் திருமணம் செய்யாமல் வாழ்க்கை அமைத்துக்கொள்வதை பேஷனாக்கி வருகிறார்கள். ஏற்கனவே நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஓவியா திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று அறிவித்திருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது வரலட்சுமியும் இடம் பிடித்திருக்கிறார். விமல், வரலட்சுமி ஜோடியாக நடிக்கும் படம் கன்னிராசி. ஷமீம் இப்ராகிம் தயாரிக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்குகிறார்.

இதில் நடித்ததுபற்றி வரலட்சுமி கூறும்போது தனது திருமண முடிவு பற்றியும் திடீரென அறிவித்து அதிர்ச்சி தந்தார். அவர் கூறியதாவது:
புதிய இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். கன்னிராசி படத்தின் ஸ்கிரிப்ட் படிக்கும்போதே விழுந்து விழுந்து சிரித்தேன். இந்த டீமும், படமும் எனர்ஜியாக இருந்தது. காதல் திருமணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து இப்படத்தில் ஜாலியாக நடித்தேன். இந்த படத்தைபோல் வேறு எந்தபடத்திலும் இவ்வளவு நடிகர்களுடன் நான் சேர்ந்து நடித்தது இல்லை. ஹீரோ விமலுடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. இது குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும். இவ்வாறு வரலட்சுமி கூறினார்.

Tags :
× RELATED சோனியா அகர்வால் நடிக்கும் தண்டுபாளையம்