நயன்தாரா பட வில்லனுக்கு மிரட்டல்; டுவிட்டரிலிருந்து விலகல்

நயன்தாரா நடித்து நீண்ட போராட்டத்துக்கு பிறகு திரைக்கு வந்திருக்கும் கொலையுதிர் காலம் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருப்பவர் அனுராக் கஷ்யாப். இந்தியில். கேங்ஸ் ஆப் வசேபுர், ராமன் ராகவ், லஸ்ட் ஸ்டோரிஸ், ஸ்கேர்டு கேம்ஸ் போன்ற படங்களை இயக்கி உள்ளதுடன் பல்வேறு படங்களில் நடித்தும் இருக்கிறார்.

இணைய தள டுவிட்டர் பக்கத்தில் மோடி அரசுக்கு எதிராக துணிச்சலாக தனது கருத்துக்களை பகிர்ந்து வந்தார் அனுராக். அவருக்கு தொடர்ச்சியாக மிரட்டல் வந்ததையடுத்து டுவிட்டரிலிருந்து வெளியேறிவிட்டார். அனுராக் கடைசியாக வெளியிட்ட மெசேஜில்,’இது எனது கடைசி டுவீட். இதிலிருந்து விலகுகிறேன். பயமின்றி என் மனதில் உள்ளதை பேச அனுமதிக்கப்படாதபோது, நான் பேசாமலேயே இருக்கலாம்.

உங்கள் பெற்றோருக்கு போனில் கொலை மிரட்டலும் மகளுக்கு ஆன்லைனில் மிரட்டலும் வரும்போது யாரும் பேச விரும்பமாட்டார்கள் என்பது தெரியும். குண்டர்கள் ஆட்சிக்கு வரும்போது, வன்முறைதான் வாழ்க்கை முறையாக இருக்கும். இந்த புதிய இந்தியாவில் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் செழித்து வளர்வீர்கள் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED 40 ஆண்டுக்கு பிறகு ரஜினி - கமல் இணையும் படம்