×

டிராபிக் போலீசின் பெருமைகளை சொல்லும் பச்சை விளக்கு

1964ல் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான படம், பச்சை விளக்கு. தற்போது அதே தலைப்பில் டி.ஜி திங்க் மீடியா ஒர்க்ஸ், விண்மீன்கள் நிறுவனம் இணைந்து படம் தயாரிக்கிறது. ஆதிக் மாறன், ஸ்ரீமகேஷ் தீஷா, தாரா, ரூபிகா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பாலாஜி. இசை, வேதம் புதிது தேவேந்திரன்.

படம் குறித்து இயக்குனர் டாக்டர் மாறன் கூறுகையில், ‘சாலை பயணமும், வாழ்க்கை பயணமும் விதிகளுக்கு உட்பட்டது. அதை மீறினால் துன்பம்தான். படத்தில் காதல் மூலம் சாலை விதிமுறைகளையும், டிராபிக் போலீசின் பெருமைகளையும் சொல்கிறோம்’ என்றார்.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!