×

ஹீரோவாக அறிமுகமாகும் தங்கர் பச்சான் மகன்

40படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்த தங்கர் பச்சான், பல படங்களை இயக்கினார். தற்போது அவர் இயக்கும் படத்தில், அவரது மகன் விஜித்  பச்சான் ஹீரோவாக அறிமுகமாகிறார். மற்றும் முனீஸ்காந்த், மிலனா நாகராஜ், அஸ்வினி, டான்ஸ் மாஸ்டர் தினேஷ், மன்சூர் அலிகான், ஸ்டன்ட்  சில்வா, யோகி ராம் நடிக்கின்றனர். பிஎஸ்என் என்டர்டெயின்ட்மென்ட் தயாரிக்கிறது.

ஒளிப்பதிவு, பிரபு தயாளன். இசை, தரண்குமார். சென்னை நகரத்தை மையமாக கொண்ட, முற்றிலும் மாறுபட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நகைச்சுவைப் படம். முழு படப்பிடிப்பும் சென்னையிலேயே தொடர்ந்து ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!