×

தமிழ் படம் தயாரிக்கிறார் ராணா

தெலுங்கில் சாய் பல்லவியுடன் நடித்து வரும் ராணா, அந்த படத்துக்காக தனது உடல் எடையை குறைத்துள்ளார். இதற்கிடையே ராணா, தமிழில் சொந்தப் படம் தயாரிக்கிறார் என்று சினிமா வட்டாரத்தில் தகவல் பரவியுள்ளது. தெலுங்கில் ஹிட்டான படம், ஜெர்சி. இதில் கிரிக்கெட் வீரராக நானி நடித்திருந்தார். அவரது மனைவியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்தார்.

இந்த படத்தை தமிழில் விஷ்ணு விஷால் நடிப்பில் ராணா தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கில் நடித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத் தமிழிலும் நடிப்பாராம். அதுபோல், தெலுங்கில் சமந்தா நடித்த ஓ பேபி படமும் தமிழில் வெளியாக உள்ளது. இப்படத்தை வேறொரு நிறுவனம் தயாரிக்க, இதிலும் சமந்தாவே நடிக்க இருக்கிறார்.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!