அரபிக் குதிரை..... சஞ்சனா தில்

நீண்ட நாட்களுக்கு பிறகு சஞ்சனா கல்ராணி புதுப்பொலிவுடன் வந்து இருக்கிறார். இத்தனை நாளா எங்க போயிருந்தீங்க சஞ்சனா’ என்றதற்கு பதில் அளித்தார்.  ‘முதலில் ஒரு விஷயம். நான் தமிழில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் முதல் படம் பாக்ஸர். அருண் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். விவேக் கண்ணன் இயக்குகிறார். அருண் விஜய்க்கும் எனக்கும் இது சவாலான படம். ஏற்கனவே நான் குதிரை ஏற்றம் கற்றிருக்கிறேன்.

அதற்கேற்ப எனது உடலை கட்டுகோப்பாக்க யோகா பயிற்சி பெற்று அதில் எக்ஸ்பர்ட் ஆகியிருக்கிறேன். அரேபிய குதிரையாக இருந்தாலும் சரி அதற்கு மேல அட்டகாசம் செய்யும் குதிரையாக இருந்தாலும் சரி நான் சவாரி செய்வேன். பாக்ஸிங். கத்தி சண்டையும் கற்றிருப்பதால் எந்த கதாபாத்திரத்துக்கும் என்னை தகுதியாக்கிக் கொண்டிருக்கிறேன்.

இந்த தகுதிகள்தான் என்னை இப்போது பாக்ஸரில் சவாலான கதாபாத்திரம் ஏற்க வைத்திருக்கிறது. ஒரு விஷயம் மட்டும் சொல்கிறேன் என்னை நீங்கள் படத்தில் பார்க்கும்போது கண்டிப்பாக ஆச்சர்யப்பட்டுப்போவீர்கள். அந்தளவுக்கு பயிற்சிகளில் ஈடுபட்ட அதேவேளையில் கன்னடம், தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துக்கொண்டிருந்தேன்’ என்றார்.

Tags :
× RELATED பெல்லி சூப்புலு தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர்