இந்த ஃபிகருக்குதான் அவ்ளோ கஷ்டப்பட்டேன்; லட்சுமிராய் புதுகலாட்டா

லட்சுமிராய் ஒரு ரவுண்டு முடிந்து 2வது ரவுண்டும் முடிந்து 3வது ரவுண்டுக்கு வந்திருக்கிறார். தப்பா நெனக்காதீங்க இந்த ரவுண்டெல்லாம் சினிமாவில் அவரது என்ட்ரி, ரீ என்ட்ரியை குறிப்பிடுவதுதான். 3வது ரவுண்டில் அவர் புது மனுஷியாக மாறியிருக்கிறார். அப்படியென்ன மாற்றம் என்பதற்கு லட்சுமிராயே பதில் அளித்திருக்கிறார். இணைய தள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பால் வண்ண மேனியில் டூ பீஸ் மட்டுமே அணிந்து பளிச்சிடும் தோற்றத்துடன் புதியபடம் வெளியிட்டு லட்சுமிராயே கமென்ட்டும் பகிர்ந்து புதுகலாட்டா செய்திருக்கிறார்.
 
‘டூ பீஸ் நீச்சல் உடை அணிய வசதியாக என் உடலை மாற்றவேண்டும் என்பதற்காக கடின உழைப்பை செலவழித்தேன். அதன் பலன்தான் எனது இந்த புதிய தோற்றம். என்னுடைய பழைய தோற்றத்தை என்னாலேயே நினைத்துப் பார்க்க முடியவில்லை.  எனது வாழ்நாளில் எடை குறைப்பு, எடை ஏற்றம் என போராடிக்கொண்டிருந்தேன்.

கடைசியாக ஒரு புதுமனுஷியாக என்னை உணர்கிறேன். உடல் அளவில் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாகவே எனக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை நான் காதலிக்கத் தொடங்கியிருக்கிறேன். நான் சந்தோஷமாக இருக்கிறேன். ரசிகர்களே நீங்கள் சாதிக்க விரும்புகிறீர்களா? உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். எதையும் சாதிக்க முடியும். என்ன நீங்கள் மாறவில்லையா? நீங்கள் தேர்வு செய்யுங்கள். மீண்டும் ஒருமுறை நான் சொன்னதை படியுங்கள்’ என குறிப்பிட்டிருக்கிறார் லட்சுமிராய்.

Tags :
× RELATED பட்டாஸ் - விமர்சனம்