மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் ஹீரோயின்கள் நடிப்பது இப்போது வாடிக்கை. இந்த வரிசையில் புதிதாக இடம்பிடித்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். நாகார்ஜுனா நடித்துள்ள மன்மதடு 2 தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ரகுல். இதன் டீஸர் வெளியானது. அதில் ரகுல் புகைப்பிடிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. அதைக்கண்டதும் நெட்டிஸன்கள் ரகுலை கடுமையாக விமர்சித்தனர்.