தம் அடிச்சா தப்பா? நெட்டிசன்களை தாக்கிய ரகுல்

மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் ஹீரோயின்கள் நடிப்பது இப்போது வாடிக்கை. இந்த வரிசையில் புதிதாக இடம்பிடித்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். நாகார்ஜுனா நடித்துள்ள மன்மதடு 2 தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ரகுல். இதன் டீஸர் வெளியானது. அதில் ரகுல்  புகைப்பிடிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. அதைக்கண்டதும் நெட்டிஸன்கள் ரகுலை கடுமையாக விமர்சித்தனர்.

இது பற்றி ரகுல் கூறும்போது, ‘மன்மதடு 2 படத்தில் நான் நவநாகரீக பெண்ணாக நடிக்கிறேன். அந்த கதாபாத்திரம் சிகரெட் புகைக்கும் என்பதால் நான் நடித்தேன். அதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. கதைப்படி கதாபாத்திரத்துக்கு என்ன தேவைப்படுகிறதோ அதை செய்வேன், அதற்கென்ன இப்போ?’ என கேள்வி கேட்டவர்களை போட்டு தாக்கியிருக்கிறார் ரகுல்.

Tags :
× RELATED சாப்பாடு கதையில் சந்தானம்