அமலாபால் விரைவில் மறுமணம்

அமலாபால் முன்னாள் கணவரும், இயக்குனருமான விஜய் 2வது திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து தானும் 2வது திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொன்னார், அமலாபால். மேலும் அவர் கூறியதாவது: எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும்,  சினிமா வாழ்க்கையிலும் பல வெற்றி, தோல்விகளை கடந்து வந்துள்ளேன். திருமண  முறிவுக்கு பிறகு நான் தனித்து விடப்பட்டது போல் இருந்தது. அதிலிருந்து  என்னை மீட்டெடுத்து பக்குவப்படுத்தியது நான் சென்ற இமயமலை பயணம்தான்.

இப்போது எல்லாவற்றையும் ஒரேமாதிரி எடுத்துக்கொள்ளும் ஜென் மனநிலைக்கு வந்திருக்கிறேன். எல்லா பிரச்னைகளையும் சந்திக்கும் துணிச்சல் வந்துள்ளது. என் சுதந்திரத்தையும், துணிச்சலையும் காட்டத்தான் ஆண்களை போல் கிராப் வைத்துக் கொண்டிருக்கிறேன். ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்ததும் அப்படித்தான். ரம்யாவுக்கு லிப்லாக் முத்தம் கொடுத்தது கூட, ஏன்  கொடுக்கக்கூடாது என்ற கேள்வியில் பிறந்ததுதான். மைனா படத்துக்கு பிறகு என் மனதுக்கு நிறைவாக எந்த படமும் அமையவில்லை.

ஆடை படம் மட்டுமே  அமைந்துள்ளது. எனது சினிமா கேரியரில் ஆடை மிக முக்கியமான படமாக இருக்கும்.  எனக்கு மறுமணத்தில் நம்பிக்கை இருக்கிறது. கட்டாயம் 2வது திருமணம்  செய்துகொள்வேன். குழந்தையும் பெற்றுக்கொள்வேன். மேலும் ஒரு குழந்தையை  தத்தெடுத்து வளர்ப்பேன். இளைஞர்களுடன் பழகி அவர்களுடைய வாழ்க்கை மற்றும் அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை தெரிந்துகொள்கிறேன். எந்தவிதமான  கட்டுப்பாட்டுக்குள்ளும் சிக்காமல், நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்.

× RELATED முதல் முறையாக கமல் படத்தில் விவேக்