ஓவியா காதலனை கிஸ்ஸடித்த நிகிஷா

நடிகை ஓவியாவும், நடிகர் ஆரவும் காதலிப்பதாக கோலிவுட் வட்டாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்கேற்பே இருவரும் பிறந்தநாளில் ஜோடியாக கேக் வெட்டி கொண்டாடியது, வெளிநாடுகளில் ஜோடியாக டேட்டிங் செய்த புகைப் படங்களும் நெட்டில் வெளியாகின. ஓவியாவிடம் இதுபற்றி கேட்டபோது, ‘நானும் ஆரவும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் காதல் இல்லை. எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை. நான் திருமணமே செய்துகொள்ள மாட்டேன்’ என்று அதிரடியாக பதில் அளித்தார்.

ஆனால் இதே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது முத்தம் பகிர்ந்து கொண்டும், காதல் லீலைகள் செய்தும் பாப்புலராகினர். ஓவியாவின் காதலன் என்று சொல்லப்படும் ஆரவுக்கு தற்போது மற்றொரு கவர்ச்சி ஹீரோயின் லிப் டு லிப் கிஸ் கொடுத்து அசத்தியிருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இது எங்கு நடந்தது என்று விசாரித்தபோது அதற்கொரு கதையை சொல்லியிருக்கிறார்கள்.

சரண் இயக்கும் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடிக்கிறார் ஆரவ். இப்படத்தில் நிகிஷா படேல் ஹீரோயின். இவர் ஏற்கனவே பாஸ்கர் ஒரு ராஸ்கல், என்னமோ ஏதோ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் ஷூட்டிங்கில் காட்சிப்படி ஆரவிற்கு லிப் டு லிப் கிஸ் தர வேண்டும் என்று இயக்குர் கூற, முடியாது என்று மறுத்தார். பிறகு காட்சிக்கு முக்கிய தேவை என்று இயக்குனர் தெரிவித்தபிறகு ஒப்புக்கொண்டு ஆரவ் உதட்டில் கிஸ்ஸடித்தார் நிகிஷா.

Related Stories: