வடசென்னை 2 டிராப்பா? தனுஷ் பதில்

வட சென்னை 2 படம் டிராப் ஆனதாக வந்த தகவல்களை மறுத்துள்ளார் தனுஷ். வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் தனுஷ் நடித்தார். இதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என அந்த படம் வெளியானபோது அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தை துவங்கவில்லை. அதற்கு பதிலாக வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

இது வெக்கை என்ற நாவலை தழுவி உருவாகி வரும் படமாகும். இதில் தனுஷ் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இதையடுத்து வட சென்னை 2 வெளியாகாது என தகவல்கள் பரவியது. இது பற்றி தனுஷ் கூறும்போது, ‘வடசென்னை 2 பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம். அந்த படம் குறித்த தகவல் எதுவாக இருந்தாலும் டிவிட்டரில் நானே தெரிவிப்பேன். படத்தை கைவிடவில்லை’ என்றார்.

Related Stories: