×

ஆமா, அதுக்கென்ன இப்ப...? போட்டு தாக்கும் ரகுல்

திரைப்படங்களில் சிகரெட் புகைக்கும் காட்சிகளில் நடிக்காதீர்கள் என்று பலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க முன்னணி ஹீரோக்கள் சிலர் தங்கள் படங்களில் புகைப்பிடிப்பதை தவிர்த்தனர். ஆனால் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியவில்லை. கதாபாத்திரத்துக்கு தேவைப்படும் பட்சத்தில் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்தனர். சமீபகாலமாக ஹீரோயின்களும் புகைப்பிடிக்கும் மற்றும் மது அருந்தும் காட்சிகளில் நடிக்கின்றனர்.

‘அக்னி நட்சத்திரம்’ பட அமலா தொடங்கி ‘ஆடை’ அமலாபால் வரை பல நடிகைகள் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிக்கின்றனர். இந்த வரிசையில் புதிதாக இடம்பிடித்திருக்கிறார் ரகுல் ப்ரீத்.  நாகார்ஜூனா நடித்துள்ள மன்மதடு 2 தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ரகுல். இதன் டீஸர் வெளியானது. அதில் ரகுல் புகைப்பிடிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. அதைக்கண்டதும் நெட்டிஸன்கள் ரகுலை திட்டி தீர்த்திருக்கின்றனர். இதற்கு ரகுல் பதில் அளித்திருக்கிறார்.

‘இதுபோல் பேசுபவர்கள் எப்போதும் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பேசுவது மட்டும்தான் வேலை. மன்மதடு 2 படத்தில் நான் நவநாகரீக பெண்ணாக நடிக்கிறேன். அந்த கதாபாத்திரம் சிகரெட் புகைக்கும் என்பதால் நான் நடித்தேன். அதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. கதைப்படி கதாபாத் திரத்துக்கு என்ன தேவைப்படுகிறதோ அதை செய்வேன், அதற்கென்ன இப்போ..?’ என கேள்வி கேட்டவர்களை போட்டு தாக்கியிருக்கிறார் ரகுல்.

Tags :
× RELATED ஸ்ரத்தா ஸ்ரீநாத் மாற்றம்