ஜோசியம் பாக்கலையோ ஜோசியம்... நயன் டும் டும் எப்போது?

நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடியின் காதல் அம்பலத்துக்கு வந்து வருடங்கள் உருண்டோடிய நிலையில் திருமணம் எப்போது என்பதை இருவருமே உறுதி செய்யவில்லை. மகனுக்கு வயதாகிக்கொண்டே போகிறது சீக்கிரம் கல்யாணத்தை முடிக்கணும் என்று விக்னேஷ் சிவன் பெற்றோர் ஒருபக்கம் முணுமுணுக்க நயன்தாராவுக்கோ பட வாய்ப்பு குறைந்தபாடில்லை. கோடிகளில் சம்பளம் கொட்டுவதுடன் அவர் நடிக்கும் படங்களும் ஹிட்டாகிறது என்பதால் நடிப்பை கைவிட முடியாமல் இருக்கிறார்.

இந்நிலையில் ரஜினியுடன் தர்பார், விஜய்யுடன் பிகில். சிரஞ்சீவியுடன் செ ரா நரசிம்மரெட்டி என 3 படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்பு முடிய இந்த ஆண்டு இறுதி ஆகிவிடும். இந்நிலையில் மேலும் பல இயக்குனர்கள் கால்ஷீட் கேட்டு வரிசை கட்டி நிற்கின்றனர். எப்படியும் இந்த ஆண்டில் நிச்சயதார்த்தம் செய்துகொள்வது என்று நயன்தாரா சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

நிச்சயதார்த்தம் முடிந்தால் போதுமா, இந்த ஆண்டில் திருமணம் முடியுமா? என்பதை கண்டறிய நயன்தாரா ஜாகத்தை ஜோதிடரிடம் தர அவர் கிரகங்களின் பலன்களை கணித்து, நயன்தாராவின் திருமணம் இந்த ஆண்டு நடக்கும் என்று கூறியிருக்கிறாராம். இதனால் விக்னேஷ் சிவன் குஷியிலிருக்கிறாராம். ஜோதிட கணிப்பு இப்படி இருக்க நயன்தாரா என்ன கணித்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

× RELATED கென்னடி கிளப்பில் கபடி இரட்டை வீராங்கனைகள்