சீனாவில் ரஜினி பட ரிலீஸ் தள்ளி வைப்பு

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படம் கடந்த ஆண்டு வெளியானது. அக்‌ஷய்குமார், எமி ஜாக்ஸனும் இதில் நடித்துள்ளனர். இம்மாதம் சீனாவில் 2.0 படத்தை பெரிய அளவில் ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடந்தது. அங்குள்ள விநியோக நிறுவனம் 50 ஆயிரம் திரையில் படத்தை வெளியிடுவதற்கு முடிவு செய்தது. இம்மாதம் படம் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தநிலையில் திடீரென்று தேதி குறிப்பிடாமல் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

சுமார் ரூ. 175 கோடி வசூல் ஆகும் என்று கூறி 2.0 படத்தை சீனாவில் வெளியிட எண்ணியிருந்த நிலையில் தற்போது அந்த வசூல் சாத்தியமில்லை என்று விநியோ கஸ்தர் தரப்பில் கூறப்படுவதே ரிலீஸ் தள்ளிப்போனதற்கு காரணமாம். சமீபத்தில் இந்தி படமொன்று சீனாவில் வெளியாகி தோல்வி அடைந்ததன் எதிரொலியாக வும் 2.0 ரிலீஸ் தள்ளிவைப்புக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே கூறிய அளவுக்கு வசூல் ஈட்டித்தர முடியும் என உறுதி தருமாறு அங்குள்ள விநியோகஸ்தரிடம் 2.0 பட தரப்பிலிருந்து கேட்டநிலையில் அதற்கு உறுதி செய்ய மறுத்துவிட்டனர். எனவே பட ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. எப்போது படம் ரிலீஸ் செய்வது என்ற முடிவும் தற்போதைக்கு எடுக்கவில்லையாம்.

Tags :
× RELATED விஜய்க்கு ஆசிரியர் எழுதிய கடிதம்