இந்தியன் 2-வில் இணையும் பிரியா பவானி - ஐஸ்வர்யா ராஜேஷ்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படம் கடந்த 1996ம் ஆண்டு திரைக்கு வந்தது. 20 வருடங்களுக்கு பிறகு அப்படத்தின் 2ம் பாகம் உருவாகிறது. கமல்ஹாசன் நடிக்கும் இப்படத்தை ஷங்கரே இயக்குகிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்தியன் தாத்தா கெட்டப்பில் கமல் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது க/பே ரான சிங்கம், சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ் கே 16 படங்களில் நடித்து வருகிறார்.

Related Stories: