அஞ்சலியை காதலிக்கும் யோகி பாபு

தி சோல்ஜர்ஸ் பேக்டரி சார்பில் பலூன் இயக்குனர் கே.எஸ்.சினிஷ் தயாரிக்கும் பேன்டசி காமெடி படத்தில் அஞ்சலி நடிக்கிறார். அவரை ஒருதலையாக காதலிக்கும் ரோட்சைட் ரோமியோக்களாக யோகி பாபு, ராமர் நடிக்கின்றனர். நெல்சன் இயக்கத்தில் உருவான 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாரா - யோகிபாபு காம்போவும் 'கல்யாண வயசு' பாடலுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

அந்த காம்போ வொர்க் அவுட் ஆனதைத் தொடர்ந்து, நயன்தாரா நடித்த ஐரா' படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதேபோல, அஞ்சலியின் அடுத்தடுத்த படங்களில் யோகிபாபு இருந்து வருகிறார். ஒளிப்பதிவு, அர்வி. இசை, விஷால் சந்திரசேகர். பாடல்கள், அருண்ராஜா காமராஜ். இயக்கம், கிருஷ்ணன் ஜெயராஜ். படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. 

Related Stories: